மாற்றுத் திறனாளிகளுக்கு, ஊன்றுகோல் மற்றும் மடிக்கணினி வழங்கிய கோவை மாவட்ட மைய நூலகம்..!!

மாற்றுத் திறனாளிகளுக்கு, ஊன்றுகோல் மற்றும் மடிக்கணினி வழங்கிய கோவை மாவட்ட மைய நூலகம்..!!

கோவை;

கோவை மாவட்ட மைய நூலகத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா 03.12.2022 அன்று மாலை 3.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களை மாவட்ட மைய நூலகர் திரு. பே. இராஜேந்திரன் அவர்கள் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல் மற்றும் உபகரணங்கள் வழங்கி கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன் (CODCEA) தலைவர் திரு.எம்.சுரேஷ்குமார் அவர்கள் தலைமையுரையாற்றினார், திரு.அர்ஜுன்ஸ்ரீதர் சோசியல் விங்க்ஸ் சேர்மன் CODCEA அவர்கள், திரு.ஆர். ஜெகநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் 60கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் CTS நிறுவனத்தின் சார்பாக பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. CODCEA நிறுவனத்தின் மூலம் 45 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது. ஒரு மாற்றுத் திறன் மாணவிக்கு மடிக்கணினி இலவசமாக வழங்கப்பட்டது.இறுதியாக 2ம் நிலை நூலகர் திரு.க.இரவிச்சந்திரன்அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.

Leave a Reply