நள்ளிரவு பூஜையில் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின்….

நள்ளிரவு பூஜையில் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின்….

திருவெண்காடு ;

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அகோர மூர்த்திக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழக முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

மேலும் ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோரமுகத்துடன் இங்கு அகோரமூர்த்தி தனிச்சன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இங்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு நேரத்தில் அகோர மூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத 3 -வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று இரவு அகோரமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. மாலையில் துர்கா ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

அகோரமூர்த்திக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சுமார் 4 மணி நேரம் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவையொட்டி துர்கா ஸ்டாலின் ஏற்பாட்டின்படி அகோரமூர்த்தி சன்னதியில் மலர்களால் பூப்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன் உள்ளிட்ட பல திமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.

முதல்வரின் மனைவி வழிபாட்டிற்காக, திருவெண்காடு காவல் ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் பூர்வீக வீட்டிற்கு எதிரே இந்த கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply