தமிழகத்தை மிரட்டும் புதிய “புயல்” – கனமழை பெய்யும் என கணிப்பு!!..

தமிழகத்தை மிரட்டும் புதிய “புயல்” – கனமழை பெய்யும் என கணிப்பு!!..

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது. கடந்த மாதம் முதல் வாரம் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறியது. சென்னையில் மிக கனமழையை கொடுத்தது. அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழையை கொடுத்தது.

இது ஆழ்ந்த தாழ்வு பகுதியாகவே இலங்கையின் வடக்கு பகுதியில் கரையை கடந்தது. அதன்பின் உருவான தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலமும் சென்னைக்கு மிக கனமழையை கொடுத்தது. அதேபோல் சென்னைக்கு அருகில் இருக்கும் மற்ற பகுதிகளிலும் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மழை பெய்தது. அதன்பின்தான் மூன்றாவது வாரம் இன்னொரு தாழ்வு பகுதி உருவானது.

வறண்ட காற்று காரணமாக தாழ்வு பகுதி மிக மிக மெதுவாக உருவானது. பெரும் கஷ்டத்திற்கு பின்புதான் இந்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. ஆனால் இது முழுமையாக வலிமை அடையும் முன்பே நிலத்திற்கு அருகே வந்தது. அதோடு வறண்ட காற்று காரணமாக இது வலிமை குறைவாக இருந்தது. இதனால் பெரிதாக மழையை கொடுக்காமலே இது கடந்து சென்றது.

இந்த நிலையில்தான் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. முன்னதாக இந்த தாழ்வு பகுதி அந்தமான் நோக்கி வருமா என்ற சந்தேகம் இருந்தது. ஏனென்றால் இந்த தாழ்வு பகுதி சீன கடல் பகுதியிலேயே முழுமையாக உருவாகும் முன் அழிந்து போய்விடும் வாய்ப்புகளும் இருந்தன. இந்த நிலையில்தான் தற்போது இந்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிசம்பர் 8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு 3 நாட்கள் பின் இது புயலாக மாற உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும். தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமைபெற்று மையம் கொண்டு நிற்கும். இது நிலத்தில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது. இதன் காரணமாக புயலாக மாறுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. இதனால் 3 நாட்களில் கண்டிப்பாக இது புயலாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply