வேலையே இல்ல … ஆனா சம்பளம் மட்டும் கரெக்டா தர்றாங்க… கடுப்பில் ஊழியர் செய்த நூதன போராட்டம் ..!!

வேலையே இல்ல … ஆனா சம்பளம் மட்டும் கரெக்டா தர்றாங்க… கடுப்பில்  ஊழியர் செய்த நூதன போராட்டம் ..!!

அயர்லாந்து ;

உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பலரும் சம்பளம் குறைவாக தருவது, பணிநீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக பணியாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அயர்லாந்தில் ஒரு பணியாளர் நடத்தியுள்ள நூதன போராட்டம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அயர்லாந்து நாட்டை சேர்ந்த டெர்மோட் மில்ஸ் என்பவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் இவருக்கு வருடத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடி சம்பளமும் கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கு யாருமே எந்த வேலையும் தரவில்லையாம். வாரம் 5 நாட்கள் அலுவலகம் சென்றால் 2 நாட்கள்தான் வேலை இருப்பதாகவும், மீத 3 நாட்கள் செய்திதாள் வாசித்துக் கொண்டு பொழுதை கழித்துள்ளார்.

ஒரு சமயத்திற்கும் மேல் பொறுக்க முடியாமல் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கு தினம்தோறும் வேலை அளிக்க வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்துள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply