என்னது ‘அம்மா மறைந்த நன்னாளா’.. உறுதிமொழி வாசிப்பில் உளறிகொட்டிய எடப்பாடி …..

என்னது  ‘அம்மா மறைந்த நன்னாளா’.. உறுதிமொழி வாசிப்பில் உளறிகொட்டிய எடப்பாடி …..

சென்னை;

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு நினைவிடத்துக்கு அருகே உள்ள மேடையில் நின்றபடி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.எடப்பாடி பழனிசாமி உறுதிமொழியை வாசிக்க, கட்சி தொண்டர்கள் அதை திரும்ப சொன்னார்கள்.

உறுதிமொழியின் போது எடப்பாடி பழனிசாமி, ”அம்மா மறைந்த நாளில் என்பதற்கு பதிலாக, ”அம்மா மறைந்த இந்நன்னாளில் ” என்று கவனமில்லாமல் கூற, தொண்டர்களும் அதை அப்படியே திரும்ப சொன்னார்கள். இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

தொடர்ந்து உறுதிமொழியை வாசித்த எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறினார்:

இதய தெய்வம் அம்மாவின் வழியில் தொடர்ந்து பயணிப்போம். தடு மாறாது தடம் மாறாது என்ற லட்சியத்தோடு வீர நடை போடுவோம். எதிரிகளை விரட்டியடிப்போம். துரோகிகளை தூள்தூளாக்குவோம் என்று வீர சபதம் ஏற்போம்.

இந்திய அரசியலின் வரலாற்றாய் வாழ்ந்து எவரும் தொட முடியாத வானமாய் வாழ்ந்து தமிழக அரசியலின் வரலாற்றில் நிகரில்லா வெற்றிகளை தந்த நம் தங்க தலைவி.

தமிழினத்தின் தன்மானம் காக்க துரோகிகளையும், எதிரிகளையும் வென்றெடுத்த வெற்றி மங்கை. தாய்குலத்தின் துயர் துடைத்த கருணை மிகு தெய்வம். எதிரியின் வியூகத்தை உடைத்தெறிந்து வீரத்தோடு திகழ்ந்த வீரமங்கை. தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.

எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்திட்ட நம்முடைய நாடி நரம்பில் கலந்திட்ட நம் அம்மா மறைந்த இந்நன்னாளில் தொண்டர் படைபலம் ஆர்ப்பரிக்க, கடமை தவறாத உடன்பிறப்புக்கள் வீர சபதம் ஏற்க குவிந்திட்ட கொள்கை வீரர்களே, வீராங்கனைகளே வாரீர், வாரீர்” என்று எடப்பாடி பழனிசாமி இவ்வாறு உறுதிமொழி ஏற்றார்.

Leave a Reply