கோவை கார் வெடிப்பு தீவிரவாத சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள்…

கோவை கார் வெடிப்பு தீவிரவாத சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள்…

கோவை ;

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவையில் கடந்த அக.23 ஆம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து அதில் இருந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

இதை அடுத்து ஜமேஷா முபின் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து வெடிபொருட்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடைய பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் இந்த வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அஃப்சா் கான் ஆகிய 6 போ் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் மூன்று பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இன்று முகமது தவுபிக், உமர்பாரூக், பெரோஸ்கான் ஆகிய 3 பேரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் மூலம் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply