மாணவர்களுக்களின் பதட்டம், மனச்சோர்வு, பயத்தை போக்க “ஹெல்ப்லைன்” சேவை -கர்நாடகா அரசு

மாணவர்களுக்களின் பதட்டம், மனச்சோர்வு, பயத்தை போக்க “ஹெல்ப்லைன்” சேவை -கர்நாடகா அரசு

கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக, 10 ஆம் வகுப்பு முடிவுகள் மற்றும் இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு மனநல தொலைபேசி உதவியை அரசு திறந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் கூறுகையில், “வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி, அவை ஒரே நாணயத்தின் இரு முகங்கள் போன்றவை. முடிவுகளை எதிர்பார்க்கும் எஸ்எஸ்எல்சி மாணவர்கள் எந்த நேரத்திலும் நம்பிக்கையை இழக்க கூடாது.” என்று கூறினார்.

மேலும், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் என அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். தாழ்வு மனப்பான்மை, துன்பம், பதட்டம், மனச்சோர்வு அல்லது பயம் போன்ற உணர்வுகள் உள்ள மாணவர்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஹெல்ப்லைனை அழைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு கர்நாடகத்தில் தோல்வி பயத்தில் மாணவர்கள் மாஸ் பங்க் செய்தார்கள். இதற்கு ஹிஜாப் தடையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கர்நாடக இடைநிலைக் கல்வித் தேர்வு வாரிய அதிகாரிகள், “கடந்த ஆண்டைப் போல மாநில அரசு தேர்வுகள் இல்லாமல் எல்லா மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வில்லை என்று மாணவர்கள் மாஸ் பங்க் செய்திருக்கிறார்கள்.

தேர்வை எழுதினால் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் அப்படி செய்துவிட்டார்கள். இதற்கு கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் கல்வியில் ஒரு பெரிய இடைவெளி விழுந்தது தான் காரணம்.” என்று தெரிவித்தனர்.
மாஸ் பங்க் நடந்த அன்று எஸ்எஸ்எல்சி தேர்வுகளுக்கு குறைந்தது 15,487 மாணவர்கள் வரவில்லை என்று கல்வி தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: