தான் தான் பெரிய “இவன்” மாதிரி பேசறான் .. அண்ணாமலையை ஒருமையில் வசைபாடிய தமிழக அமைச்சர் …

தான் தான் பெரிய “இவன்” மாதிரி பேசறான் .. அண்ணாமலையை ஒருமையில் வசைபாடிய தமிழக அமைச்சர் …

தூத்துக்குடி:

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் , எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“அழுகிய முட்டைகள் தொடர்பாக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளேன். அண்ணாமலை 6 இடங்களைதான் பார்த்துள்ளார். 50 இடங்களில் கூட அழுகிய முட்டை பிரச்சினை இருக்கலாம். அழுகிய முட்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டுதான் முட்டை பயன்படுத்தபடுகிறது.

வேண்டும் என்றே ஒதுக்கி வைக்கப்பட்ட அழுகிய முட்டைகளை தனது கட்சியினர் மூலமாக போட்டோ எடுத்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு கொடுத்தாக அண்ணாமலை கூறுகிறார்.

அழுகிய முட்டைகளை ஒப்பந்தக்காரர்களிடம் கொடுத்து மாற்றி விடுவோம். அது தான் நடைமுறை என்றும் இது பற்றி நான் பலமுறை அறிக்கை விட்டுவிட்டேன். அவருக்குத்தான் மண்டையில் ஏறவில்லை.

‘பெரிய இவன்.. தான்’ என்று இருக்கிறவன் கிட்ட ஒன்னும் சொல்ல முடியாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணாமலை தன்னுடன் ஒப்பிட்டு பேசுகிறார். அண்ணாமலை இன்றைக்கு அரசியலுக்கு வந்தவர். ஆனால் எங்கள் தலைவர் அரசியலுக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது. என்றார்.

Leave a Reply