அபராதமா?வழிப்பறியா? தமிழக அரசே வாகன ஓட்டிகள் வாழ்வதா..? சாவதா..? கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு..

விருதுநகர் ;
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி தமிழக அரசு புதிய மேட்டார் வாகன சட்டத்தினை அக்டோபர் 16, 2022 முதல் அமல்படுத்தியது.
ஏற்கனவே மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன பாதுகாப்பு சட்டம் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்திலும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இச்சட்டத்தின் படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற 46 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராத தொகைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டம் அமலுக்கு வந்தது முதலே, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருதுநகரின் பல பகுதிகளில் புதிய அபராத தொகையை கைவிடக்கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் இது அபராத தொகையா? இல்லை வழிப்பறியா? வாகன ஓட்டிகள் வாழ்வதா? சாவதா? என்ற கேள்விகளை எழுப்பி புதிய அபராத முறைகளை கைவிட கோரி வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.