பெருமாளுக்கு கருப்புக்குடை… பெருமாளுக்கு பிடிக்க வேண்டிய குடை துர்கா ஸ்டாலினுக்கு… வெளியான சர்ச்சை வீடியோ …

பெருமாளுக்கு கருப்புக்குடை… பெருமாளுக்கு பிடிக்க வேண்டிய குடை  துர்கா ஸ்டாலினுக்கு… வெளியான சர்ச்சை வீடியோ …

திருவொற்றியூர் ;

முதல்வர் ஸ்டாலின் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை நாத்திகன் என்று சொல்லி வந்தாலும்,  அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர். 

இந்நிலையில் அவர் திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றிருக்கிறார்.   அப்போது தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது மழை பெய்து கொண்டிருந்ததால் அவருடன் வந்தவர்கள் துர்கா ஸ்டாலினுக்கு கொடை பிடித்துக் கொண்டே வந்திருக்கிறார்கள்.  இதில் தான் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது . 

அதாவது,  முன்னே பெருமாளை தூக்கிக் கொண்டு செல்ல , பின்னே துர்கா ஸ்டாலின் சென்றிருக்கிறார் .  பெருமாளுக்கு பிடிக்க வேண்டிய  குடையை துர்கா ஸ்டாலினுக்கு பிடித்து இருக்கிறார்கள்.  துர்கா ஸ்டாலினுக்கு பிடிக்க வேண்டிய கருப்புக்குடையை பெருமாளுக்கு பிடித்து சென்று இருக்கிறார்கள்.

இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதை பார்த்த பக்தர்கள் பலரும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தி அடைந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply