அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தயாரித்த ராக்கெட் வெடித்து சிதறிய அதிர்ச்சி வீடியோ… 11பேர் படுகாயம்…

அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தயாரித்த ராக்கெட் வெடித்து சிதறிய அதிர்ச்சி வீடியோ… 11பேர் படுகாயம்…

ஜார்க்கண்ட்;

ஜார்க்கண்ட் மாநிலம் தனியார் கல்லூரி ஒன்றில் மாதிரி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அதில் மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். அந்த நேரத்தில் ராக்கெட் செயல்படுத்துவது குறித்து ஒரு மாணவர் விளக்கம் அளித்தார். அவரை சுற்றி 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் நின்று கவனித்துக் கொண்டு இருந்தனர். 

அப்போது மாணவர் ஒருவர் ராக்கெட் செயல்படுத்துவது குறித்து  விளக்கம் அளித்தபோது, திடீரென ராக்கெட் வெடித்தது. இந்த வெடிப்பில் மாணவர்கள் 11 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்களுக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க்ப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்து ஒன்றில் , ” இதுபோன்ற கடினமான அறிவியல் கண்காட்சியை நடத்துவதை தடை செய்ய வேண்டும். மாணவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் எந்த ஒரு கடினமான செயல்திட்டத்தையும் மாணவர்களுக்கு கொடுக்கக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply