எல்லையில் ஊடுருவ முயன்ற சீனா வீரர்களை வெறும் கைகளால் அடித்து புரட்டி எடுத்து துரத்தும் இந்திய ராணுவ வீரர்கள்… பரபரப்பு வீடியோ…

எல்லையில் ஊடுருவ முயன்ற சீனா வீரர்களை வெறும் கைகளால் அடித்து புரட்டி எடுத்து துரத்தும் இந்திய ராணுவ வீரர்கள்… பரபரப்பு வீடியோ…

புதுடெல்லி

எல்லையில் ஊடுருவ முயன்ற சீனா வீரர்களை நமது இந்திய வீரர்கள் வெறும் கைகளால் புரட்டி எடுத்து துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் வரும் சம்பவம் எப்போது நடந்தது என்பது தெரியவில்லை .

இந்தியாவின் எல்லைப்பகுதியைச் சீனா தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகிறது. இதனால் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே எப்போதும் பதற்றமான சூழ்நிலையே இருந்து வருகிறது.

இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதி அருகே உள்ள எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைத்தாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த இந்திய ராணுவ வீரர்கள், சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியைத் தடுத்துள்ளனர்.17,000 அடி உயர சிகரத்தின் உச்சியை அடைய 300-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் மேற்கொண்ட முயற்சி இந்திய ராணுவ வீரர்களால் முறியடிக்கப்பட்டது.

இதனால், இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சீன தரப்பில் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 9ம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் உள்ள யாங்சே பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலின் செயற்கைக்கோள் படம் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் எல்லையில் ஊடுருவ முயன்ற சீனா வீரர்களை நமது இந்திய வீரர்கள் வெறும் கைகளால் புரட்டி எடுத்து துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோவில் வரும் சம்பவம் எப்போது நடந்தது என்பது தெரியவில்லை .

Leave a Reply