விஷால் நடித்துள்ள லத்தி பட டிரைலர் வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் பேச்சு : ஆக்‌ஷன் திரைப் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்!!

விஷால் நடித்துள்ள லத்தி பட டிரைலர் வெளியீட்டு விழாவில் லோகேஷ் கனகராஜ் பேச்சு : ஆக்‌ஷன்  திரைப் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்!!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ், விஷால் நடித்துள்ள லத்தி பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.
இதில் லோகேஷ் கனகராஜுக்கு பேசியது வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் நடைபெற்றது. அந்த விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லத்தி திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும், காவல்துறை அதிகாரி ஜாங்கிட் லத்தி திரைப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் வெளியிட்டனர். இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, ஆக்ஷன் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு திரைப்படத்திற்கு 148 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றால், எந்த அளவிற்கு உழைப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் என எனக்கு தெரியும். எனவே, வரும் 22ஆம் தேதி வெளியாகும் லத்தி திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply