இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம்!!

ஐயப்ப பக்தர்கள் தன் தலையில் தாங்கி நிற்கும் இருமுடியின் தத்துவத்தை தெரிந்து கொள்வது அவசியம். மணிகண்டன் என்ற நாமத்துடன் ஐயப்பசாமி பூவுலகில் ராஜசேகரன் மன்னன் மகனாக வாழ்ந்த போது புலிப்பால் கொண்டு வர காட்டுக்கு சென்றார்.
அப்போது குலதெய்வமாகிய சிவபருமானை துணைக்கு அழைப்பது போல் 3 கண்ணுடைய தேங்காயை எடுத்துக் கொண்டு போகும்படி மணிகண்ட னுக்கு மன்னன் ஆலோசனை சொன்னார். அவரும் அப்படி செய்தார். அதே பழக்கத்தைத்தான் இப்போது சபரிமலை யாத்திரை செல்பவர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் கடை பிடித்து வருகிறார்கள்.
இருமுடியில் ஒருபுறம் பக்தனுக்கு தேவையான பொருட்கள், யாத் திரை முடியும் போது ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டு போன பொருட்களை எல்லாம் காலி செய்து விடுகிறான். ஆண்டவனின் பதினெட்டு படிகளை கடக்கிறான்.
ஆண்டவனை நெருங்கும் வரை தான் தனக்கென்று தேவைப்படுகிறது. நெருங்கியவுடன் நமக்கென்று ஒன்றும் தேவை இல்லை. எல்லாம் அவனுக்கே அர்ப்பணம் ஆகிவிடுகிறது என்பது தான் இருமுடியின் தத்துவம்.
ஒவ்வொரு ஆண்டும் திருவாபரணப் பெட்டியுடன் ஐயப்பசுவாமி வளர்ந்த பந்தள அரண்மனையிலிருந்து ஒரு ராஜப்பிரதிநிதி சபரிமலைக்கு வருவது வழக்கம். இவருக்கு மட்டும் தான் இருமுடி இல்லாமல் படியேறும் அதிகாரம் உள்ளது.