துணிவு படத்தின் இரண்டாவது பாடல் இதுவா ? இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘காசேதான் கடவுளடா’ என பதிவு…..

துணிவு படத்தின் இரண்டாவது பாடல் இதுவா ? இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘காசேதான் கடவுளடா’ என பதிவு…..

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தில் இரண்டாவது பாடல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘காசேதான் கடவுளடா’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பகிர்ந்துள்ள பாடலாசிரியர் வைசாக் ‘ மணி மணி மணி’ என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘காசேதான் கடவுளடா’ என்றும் இந்த பாடலை பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இந்த பதிவுகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இரண்டாவது பாடலை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Leave a Reply