‘லத்தி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடு !!

‘லத்தி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடு !!

‘வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் ‘லத்தி’. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். ‘ராணா புரொடக்ஷன்’ சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். ‘லத்தி’ திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து நடிகர் விஷால் மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். லத்தி படம் குறித்தும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “மருது படம் எனக்கு மிகவும் பிடித்த படம். நான் பாபா பாஸ்கர் மாஸ்டரிடம் அடிக்கடி கூறுவேன் நான் தனுஷ் கிடையாது.


நீங்கள் தனுஷிற்கு கற்றுக் கொடுக்கும் டான்ஸை எனக்கு கற்றுக் கொடுக்கிறீர்கள். எனது உயரத்திற்கு நான் கீழே குனிந்து மேலே வருவதற்குள் அடுத்த சரணம் வந்துவிடும் என்று கூறினேன். அதற்கு அவர் நீ கண்டிப்பாக பண்ணுவாய் தயவு செய்து பண்ணு என்று கூறி பொறுமை காத்து என்னை நடனம் ஆட வைத்தார்” என்று பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply