4 ஆயிரம் ரன்களை தொட்ட ரிஷப் பண்ட் !!

4 ஆயிரம் ரன்களை தொட்ட                   ரிஷப் பண்ட் !!

சட்டோகிராம்:
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது இந்திய அணி. சுப்மான் கில் 20 ரன்களிலும், கேப்டன் கேஎல் ராகுல் 22 ரன்களிலும், விராட் கோலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 41 ரன்கள் வரை ஒரு விக்கெட் கூட இழக்காத இந்திய அணி, 48 ரன்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் நெருக்கடியான நிலையில் களமிறங்கிய பண்ட், தனது வழக்கமான அதிரடியை காட்டினார். டி20, ஒருநாள் போட்டியில் வேண்டுமானாலும் அவர் தடுமாறலாம். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை இந்தியாவின் டாப் வீரர் என்பதை நிரூபித்தார்.

இதனால் சரிவிலிருந்த இந்திய அணி, அடுத்த சில ஓவர்களில் மீண்டது இதனால் மதிய நேர உணவு இடைவேளையின் போது,இந்திய அணி 85 ரன்களை எட்டியது. 45 பந்துகளை எதிர்கொண்ட அவர் 46 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 54 இன்னிங்சில் 50 சிக்சர்களை விளாசிய 2-வது அதிவேக இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இதே போன்று சர்வதேச கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லையும் ரிஷப் பண்ட் தொட்டார்.

Leave a Reply