திமுகஅரசுக்கு எதிராக நடந்த அதிமுகவின் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரி …

திமுகஅரசுக்கு எதிராக நடந்த அதிமுகவின் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரி …

திருப்பத்தூர்:

 மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, நீட் தேர்வு ரத்து, விவசாயக் கடன் ரத்து என அதிமுகவினர் திட்டங்களை நிறுத்தியதைக் கண்டித்து, வாணியம்பாடி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் அன்பரசன் என்பவர் பங்கேற்று அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மண்டல மின்வாரிய செயற்பொறியாளர் விஜயகுமார் அவர்களிடம் கேட்டபோது, ‘ஆம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றும் அன்பரசன் தற்போது பணியில் தான் உள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்போம்’ எனத் தெரிவித்தார்.

Leave a Reply