ஏ.ஆர்.ரகுமானுடன் தர்காவில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்!!

ஏ.ஆர்.ரகுமானுடன் தர்காவில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்!!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினி தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி மகள் ஐஸ்வர்யாவுடன் நேற்று இரவு 8-30 மணி அளவில் திருமலைக்கு சென்றார்.

அவருக்கு கோவில் நிர்வாகத்தால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலின் மகா துவாரம் வழியாக சென்று சுப்ரபாத சேவையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஜஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.


இன்று காலை ரஜினி திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் ரஜினி பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் சென்று தர்காவில் வழிப்பட்ட ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களுடன் ரஜினியின் மகள் ஐஷ்வர்யா உடன் இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Leave a Reply