திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் !!

திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் !!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 12-ந் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். ரஜினி தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி மகள் ஐஸ்வர்யாவுடன் நேற்று இரவு 8-30 மணி அளவில் திருமலைக்கு வந்தார். திருமலைக்கு வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு திருப்பதி தேவஸ்தான உதவி செயல் அலுவலர் ஹரிநாத் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தார்.

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தேவஸ்தானத்திற்கு சொந்தமான டி.எஸ்.ஆர் கெஸ்ட் ஹவுஸில் இரவு தங்கினார். இன்று அதிகாலை 5 மணி அளவில் கோவிலின் மகா துவாரம் வழியாக சென்று சுப்ரபாத சேவையில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஜஸ்வர்யாவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

தரிசனம் முடித்து வந்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் வைத்து லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். ரஜினிகாந்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். போலீசார் அவர்களை கட்டுபடுத்தினர். ரஜினிகாந்திடம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்திருப்பதாக கூறினார்.

Leave a Reply