5 வருஷத்துக்கு முன்னால என்ன நடந்தது தெரியுமா ? உதயநிதியை பற்றி கடுமையாக விமர்சித்த தமிழக எம்பி …

5 வருஷத்துக்கு முன்னால என்ன நடந்தது தெரியுமா ? உதயநிதியை பற்றி கடுமையாக விமர்சித்த தமிழக எம்பி …

விழுப்புரம்;

உதயநிதிக்கு ஐந்து வருடத்திற்கு முன்னால் என்ன  நடந்தது தெரியுமா? என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக விமர்சனம் செய்தார்.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அடுத்த நாட்டார் மங்கலத்தில் திமுக அரசை கண்டித்தும் மின்சாரக் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு போன்ற விலைவாசி உயர்வுகளை கண்டித்து அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நேற்று பங்கேற்றார். 

அப்போது பேசிய அவர்,   தமிழக மக்கள் தங்கள் குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.   பசங்களை ரூமில் தனியாக இருக்க விடாதீர்கள். ஏனென்றால் இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஒன்றரை ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் கஞ்சா அமோகமாக விற்பனையாகி வருகிறது. பள்ளி கல்லூரியில் கஞ்சா அமோகமாக விற்பனையாகி வருகிறது.   இதயும் தாண்டி போதை ஊசி வந்து கொண்டிருக்கிறது.   ராமேஸ்வரம் பகுதியில் 301 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது . தமிழ்நாடு முழுவதும் கஞ்சா அரசு செயல்பட்டு வருகிறது.

மேலும் உதயநிதியை பற்றி பேசிய அவர்

இந்த நாட்டு மக்களுக்கு அவர் என்ன செய்தார் என்பதை விடுங்கள்.  திமுகவிற்கு அவர் என்ன செய்தார்? சிறைக்கு சென்றிருக்கிறாரா? போராட்டத்தில் கலந்து இருக்கிறாரா?

யார் இந்த உதயநிதி.   5 ஆண்டுகளுக்கு  முன்னால் நடிகைகளுக்கு பின்னால் சுற்றிக் கொண்டிருந்தார் இந்த  உதயநிதி. நயன்தாரா கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை முயற்சி வரைக்கும் சென்றவர் இன்றைக்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி என்று சொல்கிறார்கள்.  வெட்கமாக இருக்கிறது.  

இதுதான் சுயமரியாதை இயக்கமா?  திமுகவின் சுயமரியாதை இப்போது உதயநிதியின் காலில் போட்டு மிதிக்கப்பட்டிருக்கிறது என்று கடுமையாக விமர்சனம் செய்தார். 

Leave a Reply