அரசு ஆஸ்பத்திரியில் பணிக்கு வராத  4 டாக்டர்கள் மீது உடனடி நடவடிக்கை…. நேரடி ஆய்வு நடத்தி தமிழக அமைச்சர் அதிரடி …

அரசு ஆஸ்பத்திரியில் பணிக்கு வராத  4 டாக்டர்கள் மீது உடனடி நடவடிக்கை…. நேரடி ஆய்வு நடத்தி தமிழக அமைச்சர் அதிரடி …

காஞ்சிபுரம்:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 4 டாக்டர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.

அந்த மருத்துவமனையில் மொத்தம் 16 டாக்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த 16 பேரில் 4 டாக்டர்கள் இன்று ஆஸ்பத்திரிக்கு வரவில்லை.. 4 பேருமே இதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் மருத்துவமனைக்கு தரவில்லை.

மகப்பேறு டாக்டர் மிர்லின், மயக்கவியல் துறை டாக்டர் பிரபாவடிவுக்கரசி, எலும்பு முறிவு டாக்டர் ஹர்ஷாபாலாஜி, தொண்டை காது மூக்கு காது சிறப்பு டாக்டர் கிருத்திகா ஆகிய 4 பேரும்தான், இன்று பணியில் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். துறை ரீதியாக 17 b ஆணைப்படி ஊக்கத்தொகை பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல, மருத்துவமனையில் முறையாக ஆய்வு செய்யாத மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ரமாமணியை டிரான்ஸ்பர் செய்யவும் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆன் தி ஸ்பாட்டில் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply