கிச்சன் ஒரு மாநிலம் … பெட்ரூம் ஒரு மாநிலம் … ஒரு சாக்பீஸ் கோட்டால் பிரிந்துள்ள மாநில எல்லைகள்… இந்தியாவில் தான் இந்த வினோதம்…

கிச்சன் ஒரு மாநிலம் … பெட்ரூம் ஒரு மாநிலம் … ஒரு சாக்பீஸ் கோட்டால் பிரிந்துள்ள மாநில எல்லைகள்… இந்தியாவில் தான் இந்த வினோதம்…

மகாராஷ்டிரா;

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மகாராஷ்டிரா- தெலுங்கானா எல்லைகள் பிரிக்கும்போது அது ஒரு வீட்டின் குறுக்கே சென்றுள்ளது. இதனால் அந்த வீட்டின் ஒரு பகுதி மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்திலும் , வீட்டின் நான்கு அறைகள்  தெலுங்கானாவின் மகாராஜ்குடா கிராமத்தில் உள்ளன.

இந்த மாநில எல்லை என்பது வெறும் ஒரு சாக்பீஸ் கோட்டால் தான் பிரிக்கப்பட்டுள்ளது. 12 பேர் வசிக்கும் வீட்டில் சமையலறை ஒரு மாநிலத்திலும் படுக்கை அறை  ஒரு மாநிலத்திலும் உள்ளது.

வீட்டின் உரிமையாளர் உத்தம் பவார் இது பற்றி கூறும்போது “1969-ல் எல்லையை ஆய்வு செய்தபோது, ​​எங்கள் வீட்டில் பாதி மகாராஷ்டிராவிலும், மற்ற பாதி தெலுங்கானாவிலும் இருப்பதாகக் கூறப்பட்டது. எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று விட்டுவிட்டோம்.

அன்றிலிருந்து இரு மாநில கிராம பஞ்சாயத்துகளுக்கும் நாங்கள் வரி செலுத்துகிறோம்.  ஆனால் பலன் என்று பார்க்கும்போது தனது குடும்பம் இரு மாநிலங்களுக்கும் வரி செலுத்துகிறது. ஆனால் தெலுங்கானா அரசாங்கத்திடமிருந்து அதிக பலன்களைப் பெறுவதாகக் கூறினார்.

இந்த மாநில எல்லை என்பது வெறும் ஒரு சாக்பீஸ் கோட்டால் தான் பிரிக்கப்பட்டுள்ளது. 12 பேர் வசிக்கும்  வீட்டில் சமையலறை  ஒரு மாநிலத்திலும் படுக்கை அறை  ஒரு மாநிலத்திலும் உள்ளது.

சமீபத்தில் இந்த வீட்டோடு  இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள  12  கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மஹாராஷ்டிராவிடம் இருந்து  எந்த பலன்களும்  சேர்வதில்லை. அதனால் தங்களை தெலுங்கானா மாநிலத்திற்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மகாராஷ்டிரா அரசாங்கத்தின் கீழ் சாலைகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக தாங்கள் போராடுவதாகவும், அதே சமயம் தெலுங்கானா மாநில முதல்வர் கே சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது ஆளும் பாரத ராஷ்டிர சமிதி வழங்கும் பள்ளிகள் மற்றும் நிதி உதவி உள்ளிட்ட சிறந்த உள்கட்டமைப்புகளை  தாங்கள் பெற விரும்புவதாகவும்  கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதனால்  எல்லை ஓரத்தில் உள்ள இந்த கிராமங்களை தெலுங்கானாவுடன் இணைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தெலுங்கானாவில் மூத்த குடிமக்களுக்கு ₹ 1,000 ஓய்வூதியம் வழங்கபடுகிறது. அதோடு குடும்பத்திற்கு 10 கிலோ ரேஷன் பொருட்களும் கிடைக்கிறது. அனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து எந்த பலன்களும் கிடைப்பதில்லை என்று கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Leave a Reply