சிஎஸ்கே ரசிகர்களுக்கு அநீதி இழைக்க மாட்டேன் – மனம் திறந்த “தோனி”..!!

சிஎஸ்கே ரசிகர்களுக்கு அநீதி இழைக்க மாட்டேன் – மனம் திறந்த “தோனி”..!!

ஐபிஎல் போட்டியில் சென்னை அணி யை தலைமை ஏற்று நடத்திச் செல்லும் எம்.எஸ்.தோனி, மும்பையில் இன்று போட்டி நடைபெறும் மைதானத்தில் வர் ணனையாளர் இயான் பிஷப் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். அப்போது, சென்னையில் விளையாடாமல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விடைபெறுவது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அநீதி இழைத் ததுபோல் ஆகிவிடும் என்று அவர் கூறினார்.

இந்த வருடம் மும்பையில் மட்டும் விளையாடிவிட்டு சென்னை ரசிகர்க ளுக்கு நன்றி சொல்லாமல் இருப்பது நன்றாக இருக்காது, மும்பை மீது எனக்கு ஒரு அணியாகவும் தனி மனித னாகவும் நிறைய அன்பும் பாசமும் கிடைத்தது. ஆனாலும் சிஎஸ்கே ரசிகர் களிடம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. அடுத்த ஆண்டு வெவ்வேறு இடங்களில் ஐபிஎல் போட்டிகள் நடை பெறும், அப்போது ஒவ்வொரு மைதா னத்திற்கும் சென்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கலாம்.

இது எனது கடைசி ஆண்டாக இருக்கு மா இல்லையா என்பது ஒரு பெரிய கேள்வி. ஏனென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னர் நடக்கப்போ வது பற்றி இப்போதே கணிக்க முடியாது. ஆனால் நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு இன்னும் வலுவாக திரும்ப வரு வதற்கு கடினமாக உழைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தோனியின் முடிவை வரவேற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இது ஒரு அற்புதமான விஷயம் என்று நான் நினைக்கிறேன். அவர் கூறியது போல, தனது அணிக்கும் அவருக்கும் ஆதரவ ளித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறார் என்று கவாஸ்கர் குறிப் பிட்டுள்ளார்.

அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளார், அவர் இந்தியாவை இதுவரை கண்டிராத உயரத்திற்கு கொண்டு சென்றார் என்றும் தோனி குறித்து கவாஸ்கர் பாராட்டு தெரிவித் தார்

உங்கள் கருத்துக்களை உள்ளிடவும்...

%d bloggers like this: