ஓபிஎஸ்யும், இபிஎஸ்யும் தனி அறையில் விட்டால் ஒருவரை ஒருவர் கடித்து குதறிக் கொள்வார்கள்…. விமர்சித்த துரைமுருகன்…

ஓபிஎஸ்யும், இபிஎஸ்யும் தனி அறையில் விட்டால் ஒருவரை ஒருவர் கடித்து குதறிக் கொள்வார்கள்…. விமர்சித்த துரைமுருகன்…

கும்பகோணம்;

நாம் தமிழர் கட்சியின் தெருமுனைப் பிரச்சாரம் நேற்று இரவு கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் இக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய சாட்டை துரைமுருகன்,

அதிமுக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கிறது. ஓபிஎஸ்யும், இபிஎஸ்யும் தனி அறையில் விட்டால் ஒருவரை ஒருவர் கடித்து குதறிக் கொள்வார்கள். இவர்களிடையே புகுந்து சசிகலா அந்த கட்சியை அபகரிக்க முயல்கிறார்.

நாம் தமிழர் கட்சி இடம் நூற்றுக்கு மேற்பட்ட யூடியூப் சேனல்கள் உள்ளது. தன்னிடம் சாட்டை என்ற யூடியூப் சேனல் மட்டுமல்ல மேலும் 15  யூடியூப் சேனல்கள் உள்ளன. இதில் ஒன்றில் தடை ஏற்பட்டால் மற்றது செயல்பட தொடங்கும்” என தெரிவித்தார்.

Leave a Reply