தொடர்ந்து 5 வது ஆண்டாக தமிழ்நாடு தான் NO.1 மாநிலம்… இந்தியா டுடே வின் ஒட்டு மொத்த ஆய்வில் தகவல்…

தொடர்ந்து 5 வது ஆண்டாக தமிழ்நாடு தான்  NO.1 மாநிலம்… இந்தியா டுடே வின் ஒட்டு மொத்த ஆய்வில் தகவல்…

டெல்லி ;

இந்தியா டுடே இதழ் நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் பிடித்துள்ளது.

இந்தியா டுடே இதழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாநிலங்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நடத்தப்பட்ட ஆய்வில் ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

பொருளாதாரம் ,கல்வி, மருத்துவம், ஆளுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

அத்துடன் இந்த பட்டியலில் பாஜக ஆளும் குஜராத் நான்காவது இடத்திலும் ,கர்நாடகா எட்டாவது இடத்திலும், மத்திய பிரதேசம் 13-வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply