போலீஸ் வாகனத்தையே ஆட்டைய போட்ட கில்லாடி திருடர்கள்… போலீசார் அதிர்ச்சி ..

போலீஸ் வாகனத்தையே ஆட்டைய போட்ட கில்லாடி திருடர்கள்… போலீசார் அதிர்ச்சி ..

தெலங்கானா: 

தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டையில் போலீசாருக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு, அவரது வாகனத்தை இரண்டு திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டையில் உள்ள புதிய பேருந்து நிலைத்தில், (டிச. 14) இரவு, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலீஸ் வாகனத்தை (TS 09 PA 0658) திருடிச் சென்றுள்ளனர். இதனை அறிந்த காவல் துறையினர், வாகனத் திருட்டில் ஈடுபட்டவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், (டிச. 15) கோதாடா மாவட்டத்தில் வாகனத்தை கண்டறிந்தனர். ஆனால், கொள்ளையர்கள் சிக்க வில்லை. சூர்யபேட்டையில் போலீஸ் வாகனம் திருட முயன்றது, இது இரண்டாவது முறை ஆகும். வாகனத்தை மீட்ட காவல் துறையினர் தற்போது கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

போலீஸ் வாகனத்தையே திருடர்கள் ஆட்டைய போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ..

Leave a Reply