அரசிடம் ஊதியம் பெற்று கொண்டு தனியார் தோட்டத்தில் வேலைபார்த்து வரும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள்.. அதிகாரிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்…

தென்காசி;
தென்காசி மாவட்ட சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர். இவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்த ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறுகையில்,
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் உட்பட்ட தாலுகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன் பொறுப்பாளராக இருக்கும் இரண்டு பெண்கள் அவர்களது உறவினர்கள் தோட்டத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், திணைகளை பராமரிப்பது போன்ற பணிகளை 100 நாள் திட்ட பணியாளர்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறையாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் முன்னிலைக்கு அமர்வுக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பொழுது மனுதாரர் தரப்பில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பணியாளர்கள் தனியார் நிலத்தில் வேலை செய்த புகைப்படங்கள் நேரம் இடம் ஆகியவற்றை ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் தங்களது உத்தரவு கூறுகையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பணியாற்றும் பணியாளர்கள், தனியார் நிலத்தில் வேலை செய்து ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைத்திட்டம் முறையாக நடைபெறவில்லை. எனவே இந்த வழக்கில் அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலாளரை சேர்க்க உத்தரவிட்டும், இந்த திட்டத்தின் முறையாக நடைமுறைகள் தொடர்பாக வளர்ச்சித்துறை செயலாளர் அருகே தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.