தமிழக ஐஏஎஸ் அதிகாரியின் காலுக்கு செருப்பு மாட்டிவிட்ட பெண் ஊழியர் … வைரலாகும் புகைப்படம் …

சென்னை’
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையராக இருக்கிறார் ஐஏஎஸ் குமரகுருபரன்.
இவர் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு நேற்று சென்றிருக்கிறார். கோவில் விசிட்டை முடித்து விட்டு புறப்படுவதற்கு தயாரானார்.
இதற்காக காரை நோக்கி அவர் சென்றார். அப்போது கோவில் பெண் ஊழியர் ஒருவர், குமரகுருபரனின் செருப்பை எடுத்து வந்து குமரகுருபரனின் கால்களுக்கிடையே அணிய வைக்கிறார்.
இந்த சம்பவம் பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசின் உயரதிகாரிகளுக்கும் இந்த வீடியோ சென்றிருக்கிறது.
