என் கையில் கட்டி இருக்கும் வாட்ச் விலை ரூ.3.5லட்சம்…என்ன ஸ்பெஷல் … விளக்கம் கொடுத்த அண்ணாமலை ..

என் கையில் கட்டி இருக்கும் வாட்ச் விலை ரூ.3.5லட்சம்…என்ன ஸ்பெஷல் … விளக்கம் கொடுத்த அண்ணாமலை ..

கோவை;

கோவை அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் டிட்கோ அமைப்பின் மூலம் தொழிற்பேட்டை அமைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக சார்பில் ஆர்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்றது. அன்னூர் விவசாய நிலம் கையகபடுத்துல் விவகாரத்தில் எங்களை தாண்டி வந்தால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரவித்திருந்தார்.

இதனிடையே தொழிற்பேட்டை அமைக்க, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாறாக, தனியாருக்கு சொந்தமாக உள்ள 1630 ஏக்கர் தரிசு நிலங்கள் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அரசு 1630 ஏக்கர் தரிசு நிலம் மட்டும் டிட்கோ மூலம் எடுத்து கொள்ளும். மீதி இடத்தை விவசாயிகள் கொடுத்தால் எடுத்து கொள்வோம் என சொல்லி இருக்கின்றனர். பாஜக இதை வரவேற்கின்றது. இரு தினங்களில் விவசாயிகளை பா.ஜ.க விவசாய அணி நிர்வாகிகள் விவசாயிகளை சந்திக்கின்றோம். விவசாயிகளின் கருத்தை கேட்டு விட்டு அடுத்த நடவடிக்கை இருக்கும் என்றார்.

மேலும் பேசிய அவர் நான் கையில் கட்டி இருக்கும் வாட்ச் விலை ரூ.3.5 லட்சம். ரஃபேல் விமானத்தின் பார்ட்ஸ் வைத்து இந்த வாட்ச் செய்தார்கள். மொத்தம் 500 வாட்ச் நாட்டில் உள்ளது. ரபேல் ஓட்ட கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை.

ஆனால் அதன் பாகங்களில் செய்த வாட்சை கட்டி இருக்கிறேன். இது 149 ஆவது வாட்ச். நான் தேசியவாதி. அதனால் ரபேல் வாட்ச்சை கட்டி இருக்கின்றேன். என் உடலில் உயிர் இருக்கும்வரை இந்த கடிகாரம் என் கையில் இருக்கும்.

இது என் தனிபட்ட விஷயம் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply