திமுக தொண்டர்களை உடனே தயாராக சொன்ன உதயநிதி…

திமுக தொண்டர்களை உடனே தயாராக  சொன்ன உதயநிதி…

சென்னை;

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆவடியில் நடந்தது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் 100 பெண்களுக்கு தையல் எந்திரம், 20 கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், 30 கால்பந்து வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் 41 சிலம்ப வீரர்களுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அவர்,“எத்தனையோ பதவிகள் அல்ல பொறுப்புகள் வரலாம் போகலாம். ஆனால் தங்களின் செல்லப்பிள்ளையாகத்தான் நான் இருப்பேன். தற்போது அமைச்சராக இருப்பதால் இருக்கும் பணிகளை சரியாக செய்ய வேண்டிய கடமை உள்ளது.

வருகிற மக்களவைத் தேர்தலுக்கு இப்போதிருந்தே நாம் பரப்பரையை தொடங்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் திமுக வெற்றி பெறும். அதனால் இப்போதே தேர்தலுக்கு  தயாராகுங்கள். 

Leave a Reply