இங்கே மத்திய அரசை விமர்சிப்பார்கள் டெல்லி சென்றால் அம்மா, தாயே என கெஞ்சுகிறார்கள்… இதுதான் திமுகவின் சமூக நீதி … திமுகவை கடுமையாக விமர்சித்த தமிழக அமைச்சர் ..

இங்கே மத்திய அரசை விமர்சிப்பார்கள்  டெல்லி சென்றால் அம்மா, தாயே என கெஞ்சுகிறார்கள்… இதுதான் திமுகவின் சமூக நீதி … திமுகவை கடுமையாக விமர்சித்த தமிழக அமைச்சர் ..

கடலூர் ;

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி அதிமுக சார்பில் நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசுசை கண்டித்தும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது சி.வி.சண்முகம் பேசியதாவது:

தமிழகத்தில் மத்திய அரசை விமர்சித்து பேசுகிறார்கள். ஆனால் டெல்லி சென்றால் மத்திய அரசிடம் அய்யா, அம்மா, தாயே என கெஞ்சுகிறார்கள்.

39 எம்.பி களும் பிச்சை எடுக்கிறார்கள். மத்திய அமைச்சர்களிடம் கெஞ்சுவது தான் திமுகவின் சமுகநீதி.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக – பாஜக கூட்டணி வர உள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் ஓட போகிறார்கள். இவ்வாறு கூறினார். 

Leave a Reply