டாஸ்மாக் கடையில பில் குடுக்க துப்பில்ல … அண்ணாமலை வாட்ச்க்கு மட்டும் பில் கேக்குறாங்க… பாஜக துணைத்தலைவர் கேள்வி ..

டாஸ்மாக் கடையில பில் குடுக்க துப்பில்ல … அண்ணாமலை வாட்ச்க்கு மட்டும் பில் கேக்குறாங்க… பாஜக துணைத்தலைவர்  கேள்வி ..

சென்னை;

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்துள்ள விலையுயர்ந்த வாட்ச் குறித்து அவருக்கும் , அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே ட்விட்டரில் வார்த்தை போர் மூண்டுள்ளது.

இதுகுறித்து இருவரும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அந்தவகையில், “ ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான அந்த  வாட்ச்  ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டது என்றும்,  நான் தேசபக்தி உடையவன் அதனால் தான் இந்த வாட்சை அணிந்திருப்பதாகவும்,  என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும்  என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அதேநேரம், 4 ஆடுகள் மட்டுமே எனது சொத்து என்று கூறிய அண்ணமாலை ரூ. 5 லட்சம் மதிப்பிலான வாட்ச்  வாங்கியது எப்படி??, அதற்கான ரசீதை வெளியிட முடியுமா என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அண்ணாமலை, விரைவில் எனது சொத்து விவரங்களை வெளியிட இருக்கிறேன். திமுக தலைவர்கள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவார்களா என்று கேள்வியெழுப்பிருந்தார். 

இதற்கு டிவிட்டரில் கருத்துதெரிவித்துள்ள பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி, “ஒவ்வொரு நாளும் பல நூறு கோடிகளுக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் சரக்குகளுக்கு ‘பில்’ கொடுக்க துப்பில்லாதவர்கள், கையில் கட்டியிருக்கும் ‘வாட்ச்’க்கு பில் கேட்பதா?” என செந்தில் பாலாஜிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply