பிச்சை எடுத்து சேமித்து வைத்த 1 லட்ச ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்து வியக்க வைத்த பாட்டி…

பிச்சை எடுத்து சேமித்து வைத்த 1 லட்ச ரூபாயை கோவிலுக்கு நன்கொடையாக கொடுத்து வியக்க வைத்த பாட்டி…

ஒடிசா ;

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் பிச்சர் எடுத்த 1 லட்ச ரூபாய் பணத்தை பாட்டி ஒருவர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள புல்பானியைச் சேர்ந்தவர் துலா போரா (வயது 70). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்ததால், உறவினர் யாரும் இல்லாத அவர், அங்குள்ள கோவில் வாசலில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

அங்கு இருந்த கோவிலில் பிச்சை எடுத்து வந்தாலும், தான் யாசகம் பெற்று சேமித்து வந்த பணத்தை அருகில் இருந்த வங்கியில் சேமித்து வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த பாட்டியை சமீபத்தில் தொடர்பு கொண்ட வங்கி அதிகாரிகள், அவரின் சேமிப்பு ஒரு லட்சம் ரூபாயை தாண்டி விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர் சேமித்த பணத்தை புல்பானியில் உள்ள ஜெகன்நாதர் கோவிலுக்கு நன்கொடையாக கொடுக்க விரும்பினார். ஆனால் அந்த பாட்டி யாசகமாக பெற்ற பணத்தை முழுவதும் பெற அந்த கோவில் நிர்வாகம் தயங்கியது. தொகை முழுவதும் கொடுத்தால் பாட்டிக்கு என ஒன்றும் இருக்காதே இருக்காதே என யோசித்து தயங்கியது கோவில் நிர்வாகம்.

அப்போது அந்த கோவில் நிர்வாகத்திடம் அவர் “நான் ஜெகன்நாதரின் தீவிர பக்தை. வாழ்வின் கடைசி நாட்களில் உள்ளேன். எனக்கென்று யாரும் இல்லை; எந்த ஆசையும் இல்லை. இந்த கோவில் வாசலில் பிச்சை எடுத்து சேமித்த பணத்தை, இந்த கோவிலின் புனரமைப்பு பணிகளுக்கு தர விரும்புகிறேன். அதை ஏற்றுக்கொள்ளுங்கள்” என கூறினார்.

இதை கேட்ட பிறகு, அந்த கோரிக்கையை நிராகரிக்க முடியாத கோவில் நிர்வாகம், அந்த பாட்டி கொடுக்கும் நன்கொடையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.

Leave a Reply