சிவன் கோவிலில் ஆபாச செயலில் ஈடுபட்ட இஸ்லாமியர்… தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது..

சிவன் கோவிலில் ஆபாச செயலில் ஈடுபட்ட  இஸ்லாமியர்… தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது..

மத்தியப்பிரதேசம்;

மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் அதிர்ச்சிக்கர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோயில் வளாகத்தில் ஒருவர், பெண்களை நோக்கி ஆபாசமாக நடந்துகொண்டு, ஆபாச வார்த்தைகளில் கூப்பாடு போட்டதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். 

குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் பெயர் வாசிம் என அடையாளம் கண்ட போலீசார், அவரை தேச பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்தனர். தொடர்ந்து, சமூக வலைதளத்தில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது. அதில், கோயிலில் இருக்கும் பெண்களை நோக்கி, வாசிம் தனது ஆண் குறியை வெளியே காண்பிப்பது பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இந்தூரின் பிரகாஷ் நகரில் உள்ள விஸ்வேஷ்வர் மகாதேவ் கோயிலில் நடந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,

“பிரகாஷ் நகர் கோயிலில் ஒருவர் ஆபாச செயல்களில் ஈடுபட்டதாக நேற்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. விசாரணை மேற்கொள்ளப்பட்டது. காவல்துறையின் வசம் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற சாட்சிகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. குற்றவாளியை போலீசார் கைது செய்து, நடவடிக்கை எடுத்துள்ளோம். 

குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவத்தின்போது, போதையில் இருந்தார். அவரின் பெயர் வாசிம் என அடையாளம் காணப்பட்டது. தேச பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

கோயிலில் இத்தகைய ஆபாச சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Leave a Reply