இதோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.. இல்லையென்றால் அவர் பேசும் மேடையில் ஏறி நாங்கள் பேச வேண்டி வரும் … அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அமைச்சர்..

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் திடலில் திமுக சார்பில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கீதா ஜீவன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது ,
சிறார்களுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையைப் பற்றி அண்ணாமலை பேசுகிறார்.. ஏற்கனவே இதைப்பற்றி நான் கூறியுள்ளேன்.. வாகனங்களில் வரும் போது ஒரு சில முட்டை டேமேஜ் ஆவது வழக்கம்.
அந்த முட்டையை மாணவர்களுக்கு வழங்குவதில்லை. அதைத் தனியாக எடுத்து வைத்து மாற்று மூட்டை வாங்கி விநியோகிக்கப்படும்.. இதை பாஜகவினர் வேண்டுமென்றே போட்டோ எடுத்து, அதைப் பரப்பி வருகின்றனர்.
இதை வைத்துக்கொண்டு அண்ணாமலை அரசியல் செய்கிறார், இதோடு அவர் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர் பேசும் மேடையில் ஏறி நாங்கள் பேச வேண்டி வரும்.
மேலும் திமுக சார்பில் தேர்தல் சமயத்தில் மகளிருக்கு உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இது குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். கண்டிப்பாக நாங்கள் செய்வோம்.
எங்கள் தலைவர் செய்வார். இப்போதுதான் ஆட்சிக்கு வந்து ஒன்றை ஆண்டு ஆகிறது.. மிக விரைவில் இது தொடர்பான அறிவிப்பைத் தக்க நேரத்தில் முதல்வர் வெளியிடுவார்” என்று கூறினார்.