அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5000 ரூபாய் அளிக்க வேண்டும் என்று முன்பு ஸ்டாலின் சொன்னார்… இப்போது தருவீர்களா ?.. ஆசைப்படும் செல்லூர் ராஜு…

அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 5000 ரூபாய் அளிக்க வேண்டும் என்று முன்பு ஸ்டாலின் சொன்னார்… இப்போது தருவீர்களா ?.. ஆசைப்படும் செல்லூர் ராஜு…

மதுரை;

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் ;

திமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையை செம்மைப்படுத்த வேண்டும்., அதிமுக ஆட்சி போன்று இல்லை; ரேஷன் கடைகளில் கைரேகை திட்டம் என்பது மூத்த குடிமக்களின் கைரேகை சரியாக விழுவதில்லை. இந்த கைரேகை திட்டத்தை தவிர்க்க வேண்டும்.
திமுக கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

உலகத்தில் உள்ள அனைவரும் சாதி மத பாகுபாடு இன்றி கொண்டாட கூடிய திருவிழா பொங்கல் திருவிழா. அதிமுக ஆட்சியில் இரண்டு கோடியே 40 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் பணம் கொடுத்துள்ளோம்.

அன்றைக்கு இருந்த எதிர்க்கட்சித் தலைவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது பொங்கல் தொகுப்பு கொடுக்கவில்லை. இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பு பரிசு கொடுப்பதாக கூறியிருக்கிறார் அதற்காக அமைச்சரவை கூட்டம் கூட்ட உள்ளார்.

அவர் முன்பு கூறியது போன்று அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர் 5000 வழங்குவார் என்று நம்புகிறோம். ஆதார் கார்டுடன் ரேஷன் அட்டையை இணைத்தவர்களுக்கு தான் பொங்கல் தொகுப்பு என்று கூறி விடாமல், அனைவருக்கும் கொடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகை தொகை என்பது ஏழைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். பொங்கல் கொண்டாடுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

இந்த வாக்குறுதியாவது நிறைவேற்றி கொடுங்கள் முதல்வர் அவர்களே என கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் முதல்வர் அவர்கள் கூறியது போன்று 5000 ரூபாய் கொடுத்தால் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள்.

மேலும் ரேஷன் அரிசி கடத்தலை முழுமையாக தடுக்க வேண்டும் என்றால் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். சும்மா அறிக்கை கொடுத்தால் மட்டும் போதாது., வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் போதை பொருள் நடவடிக்கைகளும் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. விற்பனையாளர்கள் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர். என்று கூறினார் .

Leave a Reply