கோவை தடாகம் சாலை குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானை,மற்றும் காட்டெருமைகள்..பொதுமக்கள் கவனம்.. வனத்துறை எச்சரிக்கை…

கோவை தடாகம் சாலை குடியிருப்பு பகுதியில் உலா வரும் யானை,மற்றும்  காட்டெருமைகள்..பொதுமக்கள் கவனம்..  வனத்துறை எச்சரிக்கை…

கோவை;

கோவை ஆனைக்கட்டி சாலை தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை உணவு மற்றும் குடிநீர் தேடி வனத்தை ஒட்டியுள்ள மலைவாழ் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் அவ்வப்போது உலா வருவது வழக்கம்.

இந்த நிலையில், இன்று காலை கோவை ஆனைக்கட்டிசாலை மாங்கரை பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடை மற்றும் ஆறுகளுக்கு யானை மற்றும் காட்டெருமைகள் படையெடுத்து உள்ளன.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வன விலங்குகள் நடமாடும் பகுதியில் ஆடு மாடு மேய்ப்பவர்கள் பொதுமக்கள் , மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

மேலும், தடாகம் சாலை மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் அங்கு காலை மற்றும் மலை நேரங்களில் கடுமையான மூடுபனி நிலவி வருகிறது.

தற்போது யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு, கவனமுடன் செல்லுமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Leave a Reply