ஸ்டாலின் மருமகனிடம் 4 கோடி மதிப்பு உள்ள வாட்ச் மட்டும் 20 இருக்கு, அதுமட்டுமில்லை …அண்ணாமலைக்கு ஆதரவாக பட்டியல் வெளியிட்ட சவுக்கு சங்கர்…

சென்னை;
பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என்று கேட்டிருந்தார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘’திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.
அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்’’என்று தெரிவித்திருந்தார்.
உடனே அமைச்சர் செந்தில்பாலாஜி, புத்திசாலித்தனமாக’ மே 2021 இல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?’’என்று கேட்டிருக்கிறார்.
இந்நிலையில் இதற்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ‘’
1) காலேஜ் முடிச்ச பையனுக்கு ஏது ஹம்மர் ? கடத்தல் ஜோசப் உடன் உதயநிதிக்கு என்ன உறவு ?
2) ரெட்ஜெயண்ட் தொடங்க முதலீடு ஏது ?
3) 2011 முதல் 2021 வரை அமைதி. ஆட்சிக்கு வந்ததும் ஏது இவ்வளவு படம் ?
4) உதயநிதியின் 10 ஆண்டு வருமான வரிக் கணக்கு என்ன ?
இப்படி கேக்கணும் அண்ணாமலை’’ என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ‘’இவங்க வீட்டு மாப்பிள்ளை சபரீசன் கிட்ட 2 முதல் 4 கோடி வரை மதிப்பில் உள்ள வாட்ச் மட்டும் 20 இருக்கு. இவனுங்க வாட்ச் பத்தியெல்லாம் பேசலாமா ?
மொதல்ல, சென்னையில இந்த குடும்பத்துக்கு எத்தனை வீடுன்னு கணக்கெடுங்க. சித்தரஞ்சன் சாலை, வேளச்சேரி, உளுந்தை 100 ஏக்கர் நிலம்..’’என்று அடுக்கிக்கொண்டே போகலாம் என்கிறார்.
’’ சரி அவ்வளவு வெளிப்படையான ஆளுதானே நீங்க. 2011 முதல் உங்கள் மற்றும், உங்க தம்பி அசோக் வருமான. வரி ரிட்டர்ன்ஸ் வெளியிடுங்க பாலாஜி. பாப்போமே உங்க வெளிப்படைத்தன்மையை’’என்று அண்ணாமலைக்கு ஆதரவாக பட்டியல் போட்டு கொடுத்திருக்கிறார் சவுக்கு ஷங்கர் தடாலடியாக.