ஏற்கனவே 1000 கோடி மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளை போய் உள்ளது… இனியும் கொள்ளை போவதை தடுக்க வேண்டும்”… கலெக்டரிடம் மணல் லாரி உரிமையாளர்கள் மனு…

ஏற்கனவே 1000 கோடி மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளை போய் உள்ளது… இனியும்  கொள்ளை போவதை தடுக்க வேண்டும்”… கலெக்டரிடம்  மணல் லாரி உரிமையாளர்கள் மனு…

சேலம்;

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மணல் லாரி  உரிமையாளர் சம்மேளன பொதுச் செயலாளர் கண்ணையன் தலைமையில் மணல் லாரி உரிமையாளர்கள் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்ட கல் குவாரிகள் முறையாக கண்காணிக்கப்படுவது இல்லை. குறிப்பிட்ட அளவுக்கு மேல் கனிம பொருட்களை வெட்டி எடுக்கக்கூடாது என விதிகள் இருந்தும், அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஆயிரக்கணக்கான லோடு கனிம பொருட்கள் தினந்தோறும் கொள்ளை போகிறது.

இதனால் கரடு புறம்போக்கு மற்றும் மலைக்குன்றுகள் சேலம் மாவட்டத்தில் அழிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 1000 கோடி மதிப்பிலான கனிம வளங்கள் கொள்ளை போய் உள்ளது.

இதற்கு அதிகாரிகள் தான் முழுமையான காரணம். அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இந்த தொழில் சுதந்திரமாக நடைபெறுகிறது. இதனால் அரசுக்கு வர வேண்டிய பல கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே ஒவ்வொரு கல் குவாரியிலுமிருந்து வெளியே கொண்டு செல்லப்படும் எம் சாண்ட் மற்றும் கனிம வளங்களை கண்காணிக்க வேண்டும். அதற்காக வரி விதிப்பு வேண்டும். அதேசமயம், சாலையோரங்களில் மணல் மற்றும் எம் சாண்டுகளை கொட்டி விற்கும் சிறு வியாபாரிகளை அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

அவர்களை தொழில் செய்யக்கூடாது என நிர்பந்தம் செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாட உள்ளோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply