சிங்கப்பெண்ணே பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் !!

சிங்கப்பெண்ணே பாடல் யூடியூப்பில்      100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் !!

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான படம் பிகில். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருந்தார்.

நயன்தாரா கதாநாயகியாகவும், கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 2019ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஷாஷா திருப்பதி இணைந்து பாடிய சிங்கப்பெண்ணே பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிலையில் இப்பாடல் வெளியாகி 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Reply