வீட்டு வரி செலுத்தாததால் அபராதத்துடன் ரூ.1.5 லட்சம் செலுத்துமாறு தாஜ்மஹாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிபுத்திசாலி நகராட்சி அதிகாரிகள்…

வீட்டு வரி செலுத்தாததால் அபராதத்துடன் ரூ.1.5 லட்சம் செலுத்துமாறு தாஜ்மஹாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிபுத்திசாலி நகராட்சி அதிகாரிகள்…

ஆக்ரா: 

உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க உள்நாடு மற்றும் உலக நாடுகளில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வருகின்றனர். இந்நிலையில், முறையாக வீட்டுவரி செலுத்தாத காரணத்திற்காக தாஜ்மஹாலுக்கு 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி செலுத்தாத காரணத்திற்காக 88 ஆயிரத்து 784 ரூபாயும், அபராதத் தொகையும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் வரியை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு இந்திய தொல்லியல் துறைக்கு, ஆக்ரா நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், வீட்டு வரி அபராதம் குறித்து இந்திய தொல்லியல் துறை விளக்கமளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

“ஆக்ரா நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டு வரி வசூலிக்கும் உரிமையை சாய் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கி நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து உள்ளதாகவும், செயற்கைகோள் படங்கள் மேப்பிங் மூலம் தனியார் நிறுவனம் தவறுதலாக வீட்டு வரி ரசீது அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இதுகுறித்து ஆக்ரா நகராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீட்டுவரி பாக்கி என்று தாஜ்மஹாலுக்கு நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிகாரிகளின் அதிபுத்திசாலித்தனத்தை காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி  வருகின்றனர் .

Leave a Reply