பேரிச்சம் பழம் குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடணும் தெரியுமா?

வெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்படும் ஓர் சுவையான உலர்பழம் தான் பேரிச்சம் பழம். நம் அனைவருக்குமே பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது என்று தெரியும். ஆனால் அந்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று கேட்டால் பலருக்கும் சரியாக தெரியாது.
ஒரு பொருளை சாப்பிடும் முன் அதன் முழு பலனை தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். பேரிச்சம் பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக இவற்றை குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
பேரிச்சம் பழத்தில் ஏராளமான அத்தியாவசிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. குறிப்பாக, இதில் அத்தியாவசிய வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன. இது தவிர பேரிச்சம் பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களும் உள்ளதால், செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இப்போது ஏன் ஒருவர் குளிர்காலத்தில் பேரிச்சம் பழத்தை சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காண்போம்.
இன்று பெரும்பாலானோர் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இப்பிரச்சனை இருப்பவர்கள் மூட்டுக்களில் கடுமையான வலியை சந்திப்பார்கள். அதுவும் குளிர்காலத்தில் மூட்டு வலிகள் கடுமையாக இருக்கும். எனவே குளிர்காலத்தில் பேரிச்சம் பழத்தை சாப்பிடும் போது, அதில் உள்ள மக்னீசியம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூட்டு வலிகளில் இருந்து நிவாரணத்தை அளிக்க உதவி புரியும்.
குளிர்காலத்தில் ஏராளமானார் சளி பிரச்சனையை சந்திப்பார்கள். இந்த பிரச்சனையை சரிசெய்ய பேரிச்சம் பழம் உதவும். அதற்கு 2-3 பேரிச்சம் பழத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மிளகுத் தூள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, இரவு தூங்கும் முன்பு குடிக்க வேண்டும். இதனால் சளியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பேரிச்சம் பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுப் பொருளுள் ஒன்று. ஏனெனில் இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. இச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். மேலும் பேரிச்சம் பழத்தில் ஐசோஃப்ளேவோன்கள் உள்ளன. இவை இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
பேரிச்சம் பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை செரிமான அமிலங்களின் உற்பத்தியை அதிகரித்து, உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்கின்றன. மேலும் பேரிச்சம்பழம் குடலியக்கத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
பொதுவாக குளிர்காலத்தில், நமது உடலின் மெட்டபாலிசம் மெதுவாக இருக்கும். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே பேரிச்சம் பழத்தை சாப்பிடும் போது, அது உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, செரிமான பிரச்சனைகள் தடுக்கிறது.
குளிர்காலத்தில் நிறைய பேர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் ஆஸ்துமா. குளிர்காலத்தில் ஆஸ்துமா பிரச்சனை உங்களுக்கு வரக்கூடாதெனில், தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 1-2 பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள். இதனால் பேரிச்சம் பழம் ஆஸ்துமா தூண்டுதலைக் குறைக்க உதவி புரியும்.
குளிர்காலத்தில் பலர் மந்தமாக, ஒருவித சோம்பலை உணர்வோம். பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள இயற்கை சர்க்கரை, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். எனவே நீங்கள் எப்போதெல்லாம் சோம்பலை உணர்கிறீர்களோ, அப்போது 1-2 பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள்.
பேரிச்சம் பழத்தில் நார்ச்த்து அதிகம் உள்ளது. நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டால், சில பேரிச்சம் பழத் துண்டுகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, பின் மறுநாள் காலையில் அதை நசுக்கிவிட்டு, வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க உதவும்.
இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும் பேரிச்சம் பழத்தில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு சத்துக்களும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் மிகவும் முக்கியமான சத்துக்களாகும். எனவே தினமும் 5- பேரிச்சம் பழத்தை சாப்பிட இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.