தினமும் குளிர்காலத்தில் ஒரு டம்ளர் கேரட்-பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

தினமும் குளிர்காலத்தில் ஒரு டம்ளர் கேரட்-பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

குளிர்காலம் தொடங்கிவிட்டது. குளிர்காலத்தில் பலவிதமான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும். இதைத் தவிர்க்க குளிர்காலத்தில் அதிகம் விளையும் காய்கறிகளை உண்ண வேண்டும்.

ஏனெனில் பருவகால உணவுகளை உட்கொண்டு வந்தால், அந்த பருவகாலத்தில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் அளவில் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். அந்த வகையில் குளிர்காலத்தில் கேரட் மற்றும் பீட்ரூட் சீசன் என்பதால், இந்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. அதுவும் இந்த இரண்டு காய்கறிகளை சாலட், ஜூஸ் என்று பலவாறு உணவில் சேர்க்கலாம்.

நீங்கள் ஜூஸ் பிரியர் என்றால், குளிர்காலத்தில் கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸை அதிகம் உணவில் சேர்த்து வாருங்கள். இவ்விரு ஜூஸ்களும் மிகவும் சுவையாக இருப்பதோடு, தினமும் குடித்தாலும் போரடிக்காது. சரி, கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸை குளிர்காலத்தில் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

கேரட் ஒரு கலோரி குறைவான காய்கறி மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. அதுவும் இதில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நல்லது. தினமும் கேரட் ஜூஸை குடித்து வந்தால், பார்வை மேம்படுவதோடு, கண் தொடர்பான நோய்களின் அபாயமும் குறையும்.

இது தவிர கேரட்ஜூஸ் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் புற்றுநோயின் அபாயம் குறையும், உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறும், சருமத்தின் பொலிவு மேம்படும். முக்கியமான சர்க்கரை நோயாளிகள் குடிக்க ஏற்றது.

உங்களுக்கு காயம் படும்போது அதிக இரத்தம் போகுதா? அப்ப இந்த சத்து உணவுகள சாப்பிடுங்க சரியாகிடும்! உங்களுக்கு காயம் படும்போது அதிக இரத்தம் போகுதா? அப்ப இந்த சத்து உணவுகள சாப்பிடுங்க சரியாகிடும்!

உங்கள் சருமம் பளபளப்பாகவும், பொலிவோடும் இருக்க வேண்டுமா? அப்படியானால் பீட்ரூட் ஜூஸை தினமும் குடியுங்கள். அதுவும் இரத்த சோகை உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது.

இவை இரண்டும் புதிய இரத்த செல்களின் உருவாக்கத்திற்கு உதவுகிறது. முக்கியமாக இதில் வைட்டமின் பி9 உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது.

பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும் பீட்ருட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து உள்ளதால், இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.

உங்களுக்கு பீட்ரூட் ஜூஸின் சுவை பிடிக்காவிட்டால், அந்த ஜூஸுடன் ஆரஞ்சு ஜூஸை சேர்த்துக் கொள்ளலாம். இது பீட்ரூட் ஜூஸின் சுவையை அதிகரிப்பதோடு, ஜூஸில் வைட்டமின் சியின் அளவையும் அதிகரிக்கிறது. எந்த ஒரு ஜூஸிலும் சர்க்கரையை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது ஜூஸினால் பெறும் நன்மைகளைத் தடுக்கும். வேண்டுமானால், சுவைக்கு ஒரு சிட்டிகை ப்ளாக் சால்ட் சேர்த்துக் கொள்ளலாம். இது வாய்வுத் தொல்லை மற்றும் அசிடிட்டியைத் தடுக்கும்.

Leave a Reply