அடுத்த 90 நாள்களில், சீனாவில் 60 சதவிகிதத்தினரும் உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் – ஷாக் கொடுக்கும் நிபுணர்..!

அடுத்த 90 நாள்களில், சீனாவில்                  60 சதவிகிதத்தினரும் உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் – ஷாக் கொடுக்கும் நிபுணர்..!

சீனா,
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை நிலைகுலைய வைத்த கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனாவால் உலகம் முழுவதும் கோடி கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

அறிவியல் உலகின் தொடர் முயற்சியால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அது கட்டுப்பாட்டில் வரவழைக்கப்பட்டது.

கொரோனா எண்ணிக்கை குறைந்ததை தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இருந்தபோதிலும், பல மாதங்களாக சீனாவில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதை தொடர்ந்து, மக்கள் போராட்டத்திற்கு பிறகு பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் நிரம்பி வழிவதாக தொற்றுநோயியல் மருத்துவரும் சுகாதார பொருளாதார நிபுணருமான எரிக் ஃபீகல்-டிங் தெரிவித்துள்ளார்.

அடுத்த 90 நாள்களில், சீனாவில் 60 சதவிகிதத்தினரும் உலக மக்கள் தொகையில் 10 சதவிகிதத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக, லட்சக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கை கொரோனா உலுக்கி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்படும் சுடுகாடுகளில் இறந்த உடல்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட வெள்ளம் போல காட்சி அளிக்கிறது.

இதுகுறித்து விரிவாக பேசிய தொற்றுநோயியல் மருத்துவர் எரிக் ஃபீகல்-டிங், “யாரெல்லாம் கொரோனாவுக்கு உள்ளாக வேண்டுமோ. ஆகட்டும். யாரெல்லாம் இறக்கிறார்களோ இறக்கட்டும்.

சீக்கிரமாக தொற்றுநோய் பரவி சீக்கிரமாக உயிரிழந்து, கொரோனா சீக்கிரமாக உச்சம் தொட்டு சீக்கிரமாக உற்பத்தி தொடங்க வேண்டும் என்பதே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோளாக உள்ளது” என்றார்.

பெய்ஜிங்கில் கடந்த நவம்பர் 19 முதல் 23 வரை, கொரோனாவால் நான்கு பேர் உயிரிழந்தனர். ஆனால், அதற்கு பிறகு உயிரிழப்பு ஏற்படாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக, சீன அமைச்சகம், மாநில கவுன்சில் ஆகியவையிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், இன்னும் பதில் அளிக்கப்படவில்லை.

சீனாவில் கொரோனா நிலைமை மோசமாக மாறி வருவது குறித்து செய்தி வெளியிட்டுள்ள The wall street journal, “சீன தலைநகரின் கிழக்கு திசையின் விளம்பில் அமைந்துள்ள பெய்ஜிங் டோங்ஜியாவோ சுடுகாட்டில் உடலை தகனம் செய்ய கோரி வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது என சுடுகாட்டில் வேலை செய்வோர் தெரிவித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளது.

சுடுகாட்டிற்கு சாதாரண நாள்களில் 30 முதல் 40 உடல்கள் கொண்டு வரப்படும் என்றும் ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு 200 உடல்கள் கொண்டு வரப்படுவதாகவும் எனக் கூறப்படுகிறது.
….

Leave a Reply