ஜெயலலிதாவின் சர்க்கரை அளவு 228 மில்லி கிராம், BP 160 ,எடை100 கிலோ.. இந்த நிலையில் அவருக்கு ஆப்ரேஷன் செய்தது சரியா?… நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி….

சென்னை;
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆபரேஷன் செய்தது சரியா என்று அவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
வரைந்த மூத்த வக்கீல் நடன சபாபதி அரசு வக்கீலாக சிறப்பாக பணியாற்றிய காலத்தில் கூட்டுறவு சங்க வழக்குகளில் திறமையாக வாதிட்டார். நீதிமன்றத்தில் எந்த ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றாலும் அதனை இளம் வக்கீல்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
வழக்கு நடைபெற்றது சரியா தவறா என்று நாம் முடிவு செய்வதை விட அதனை நீதிமன்றம் முடிவு எடுப்பதற்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீங்கள் சொன்ன அறிக்கை எங்கு பரிசோதித்து பார்ப்பது என்று பலரும் என்னிடம் கேள்வி எழுப்பினர்.
ஜெயலலிதாவின் வயது 68, உயரம் 5 அடி, எடை 100 கிலோ இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கும் போது சர்க்கரை அளவு 228 மில்லி கிராம், ரத்த அழுத்தம் 160 ஆக இருந்தது.
ஜெயலலிதாவின் உடல் எடை, ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு இப்படி இருக்கும் போது அவருக்கு ஆபரேஷன் செய்யலாமா என்பதுதான் கேள்வி. இப்படிப்பட்டவர்களுக்கு ஆபரேஷன் செய்யலாமா என்பது குறித்து உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.