தொண்டர்கள் கொடுத்த பரிசு பொருள்… பிரித்து பார்த்து  உறைந்து போய் நின்ற எடப்பாடி..

தொண்டர்கள் கொடுத்த பரிசு பொருள்… பிரித்து பார்த்து  உறைந்து போய் நின்ற எடப்பாடி..

சேலம் :

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் அதிமுக நிர்வாகிகள் சிலர் இணைந்து ஸ்பெஷல் பரிசு ஒன்றை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கினர்.

வழக்கமாக பரிசுப் பொருட்களை வாங்கி தனது உதவியாளரிடம் கொடுத்து விடுவார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்த முறை நிர்வாகிகள் அப்படி விடவில்லை. அங்கேயே பிரித்து பார்க்குமாறு எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து, நிர்வாகிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி, அந்தப் பரிசைப் பிரித்து பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிசு, போட்டோ பிரேம் போல இருந்ததால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் தனது படம் இடம்பெற்றிருக்கும் என நினைத்தார் ஈபிஎஸ்.

ஆனால், கிஃப்ட் கவரை பிரித்து, அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டார். காரணம், அதிமுக நிர்வாகிகள் அளித்த அந்த போட்டோ ஃப்ரேமில் இருந்தது எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாளின் புகைப்படம்.

அதிமுக நிர்வாகிகள் அளித்த புகைப்பட பரிசில் தனது தாயாரின் புகைப்படத்தைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தார் எடப்பாடி பழனிசாமி. உடனே, தன்னை அறியாமல் கண்களில் ஆனந்தக் கண்ணீரும் பெருக்கெடுத்தது. இதனால், மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகளும் நெகிழ்ந்து போனார்கள்.

இந்த நிகழ்வு அங்கு ஒருவித நெகிழ்ச்சி அலையை ஏற்படுத்திய நிலையில், தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர். “தவசாயி அம்மாள் பெற்றெடுத்த தங்கமகன் எடப்பாடியார்”, “சேலம் மன்னின் மைந்தர் எடப்பாடியார்” என்றும் தொண்டர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

Leave a Reply