இன்று பிரதோஷம் : சிவராத்திரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபட உகந்த நாள்!!

இன்று பிரதோஷம் : சிவராத்திரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபட உகந்த நாள்!!

பெருமானுக்குரிய விரதங்களில் ஒன்று சிவராத்திரி விரதம். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி தினத்தில் வருவதை மகா சிவராத்திரி என்கிறோம். மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

விரதம் கடைபிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணைசெய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் வரும் மாத சிவராத்திரிக்கு ஒரு சிறப்பு உண்டு. ஒவ்வொரு மாத சிவராத்திரி வழிபாடும் ஒவ்வொரு தெய்வத்தால் வழிபடப்பட்டதாகும். அதன் முழு விபரத்தை இங்கே பார்க்கலாம்.

சித்திரை மாதம் – உமாதேவியால் வழிபடப்பட்டது.

வைகாசி மாதம் – சூரிய பகவானால் வழிபடப்பட்டது.

ஆனி மாதம் – ஈசனால் வழிபடப்பட்டது.

ஆடி மாதம் – முருகனால் வழிபடப்பட்டது.

ஆவணி மாதம் – சந்திரனால் வழிபடப்பட்டது.

புரட்டாசி மாதம் – ஆதி சேஷனால் வழிபடப்பட்டது.

ஐப்பசி மாதம் – இந்திரனால் வழிபடப்பட்டது.

கார்த்திகை மாதம் – சரஸ்வதி தேவியால் வழிபடப்பட்டது.

மார்கழி மாதம் – லட்சுமியால் வழிபடப்பட்டது.

தை மாதம் – நந்தி தேவரால் வழிபடப்பட்டது.

மாசி மாதம் – தேவர்களால் வழிபடப்பட்டது.

பங்குனி மாதம் – குபேரனால் வழிபடப்பட்டது.

மாத சிவராத்திரி நாளில், சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், சிவ நாமங்களை சொல்லி ஜெபிப்பதும் மகத்தான பலன்களை தந்தருளும் என்பது ஐதீகம். மாத சிவராத்திரியில் சிவாலயத்துக்குச் சென்று சிவலிங்கத் திருமேனியையும் நந்திதேவரையும் வழிபட வேண்டும். சிவனாருக்கு வில்வம் சார்த்தி பிரார்த்தனை செய்தால் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைப்பார் சிவபெருமான்.

Leave a Reply