அடுத்து அதிரடி இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் ரஜினிகாந்த்!!

அடுத்து அதிரடி இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் ரஜினிகாந்த்!!

தமிழ்ப்படங்களில் வெற்றிக்கான குதிரை யார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சூப்பர்ஸ்டார்னு சொல்லிவிடலாம். தமிழில் முதல் 100 கோடி, 500 கோடி வசூலைத் தொட்ட படங்கள் எதுன்னா அது கண்டிப்பா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படமாகத் தான் இருக்கும்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ரெக்கார்டு கிரியேட்டர். உலகம் முழுவதும் சூப்பர்ஸ்டார்னா யாருன்னு தெரியும். நைஜீரியா, சைனா, அமெரிக்கா, ஜப்பான், மலேசியான்னு சொல்லிக்கொண்டே போகலாம்.

தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டுள்ள படம் ஜெய்லர். சன் பிக்சர்ஸின் தயாரிப்பில் அனிருத் இசை அமைத்து வரும் படம். ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சிவ ராஜ்குமார், பிரியங்கா மோகன், யோகிபாபு, இந்த படத்துல சின்ன வயசுல வர்ற ரஜினி ….சிவகார்த்திகேயன்….!

தமிழ் புத்தாண்டு 2023ல் ரிலீஸாக உள்ளது. இது வேற லெவல்ல ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் டைரக்டர். இவர் கோலமாவு கோகிலா படத்திற்காக நார்வே தமிழ்ப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றார்.

அடுத்து இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தியின் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இவர் டான் பட டைரக்டர். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசை அமைக்கிறார். சிபியின் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து விட அவரும் ஓகே சொல்லி விட்டார். 2023ம் ஆண்டுதமிழ்ப்புத்தாண்டுக்கு சூட்டிங். 2024 பொங்கலுக்கு ரிலீஸ்.

அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் படம் நடிக்க உள்ளார். இவரது கதை பிடித்து விட சம்மதம் சொல்லியிருக்கிறார். டைரக்டர் தேசிங்கு பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர். இந்தப் படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது.

அடுத்து அதிரடி இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். ஏற்கனவே தனுஷ் தயாரிப்பில் இந்தப் படத்தில் நடிக்க இருந்தார். அப்போது வெற்றிமாறனின் இந்தக் கதையில் நடிக்க முடியாத நிலை இருந்தது. இப்போது அந்தக் கதையில் நடிக்கலாமே என்று ஓகே சொல்லியிருக்கிறார்.

அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவாவின் படம். இவர் இயக்கிய அண்ணாத்தே படத்திற்கு கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த இயக்குனரோட இன்னொரு படத்தில் நடிக்க விரும்பினார் ரஜினி. அதற்காக கதை தயார் செய்யும்படி சொன்னார். அந்த வகையில் சிறுத்தை சிவாவின் கதையும் ரஜினிக்குப் பிடித்து விட்டது. அதனால் ஓகே சொல்லியிருக்கிறாராம்.

அடுத்து ஆஸ்தான இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கதையும் ஓகே. முத்து, படையப்பா என மாபெரும் வெற்றிப்படங்களைத் தந்தவர் கே.எஸ்.ரவிகுமார். இப்போது பீல்டு அவுட்டான இயக்குனரை மீட்க நடிகர் ரஜினி ஓகே சொல்லிட்டாராம்.

ஏழாவதாக ரஜினிகாந்த்துக்கு வர உள்ள படம் எது என்றால் ஆச்சரியப்படுவீர்கள். இது தான் இவரது கடைசி படமாகக் கூட இருக்கும். இயக்குனர் ஷங்கரின் படம் தான் அது. படத்தின் பெயர் 3.0 . இதற்கான கதையும் ரெடி. தலைவரோட கடைசி படத்தை நான் இயக்கப் போவதால் படத்தின் கதையைப் பக்காவாக ரெடி பண்ணி வருகிறார்.

இதற்கு முன் இயக்குனர் ஷங்கர் அந்நியன் படத்தோட இந்தி ரீமேக், ராம்சரணுடன் தெலுங்கு படம், இந்தியன் 2 என 5 வருஷத்து இவரு படு பிசியாக உள்ளார். சூப்பர்ஸ்டாரும் பிசி தான். அதனால இருவரும் சேர்ந்து 2026ல ஷங்கர் படம் வெளியாகும் என தெரிகிறது. இந்தப்படம் உலகம் முழுவதும் வேற லெவல்ல இருக்குமாம்.

Leave a Reply