எடப்பாடியிடம் இருப்பது டெண்டர் படை, இங்கே இருப்பது தொண்டர் படை… ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஆவேசம் …

எடப்பாடியிடம் இருப்பது டெண்டர் படை, இங்கே இருப்பது தொண்டர் படை… ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஆவேசம்  …

சென்னை;

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அவருடைய ஆதரவு மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம், கு.பகிருஷ்ணன்,  ஜே சி டி பிரபாகர்,  மனோஜ் பாண்டியன், புகழேந்தி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மருது அழகுராஜ்,  

நாற்காலிக்கு பித்து பிடித்து அலைபவர்கள் மத்தியில் கிடைத்த நற்காலியை உரியவரிடம் ஒப்படைத்தவர் ஓபிஎஸ்.  இரண்டு முறை தன் பதவியை ஓபிஎஸ் இடம் வழங்கி ஜெயலலிதா அடையாளம் காட்டிவிட்டார் என்றார்.

 மனோஜ் பாண்டியன் பேசியபோது,  

அரைகுறை சட்ட வல்லுனர்களை வைத்துக்கொண்டு ஒற்றை தலைமை என சொல்லி வருகின்றார்கள்.  அதிமுகவை பிடித்திருக்கும் நோய்தான் எடப்பாடி.     அதற்கான மருந்து தான் ஓபிஎஸ்.   முன்வைத்த காலை பின் வைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் . எடப்பாடி பழனிச்சாமி இடம் உள்ளது டெண்டர் படை தான், எங்களிடம் உள்ளது தொண்டர் படை என்றவர்,

பத்தாண்டு காலம் சம்பாதிப்பவர்கள் உங்களிடம் உள்ளார்கள்.  எங்களிடம் இருப்பவர்கள் சுயநலம் இல்லாத பாடுபடும் போராடும் தொண்டர்கள்.  ஓபிஎஸ் ஆட்சிக்கு வந்ததும் கூவத்தூரில் என்ன நடந்தது என்பது குறித்து தனி கமிஷன் வைத்து விசாரணை நடத்தி அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

ஜேசிடி பிரபாகர் பேசியபோது,  

நான்கு பணக்காரர்களின் கையில் அதிமுக சிக்கிவிடக்கூடாது . அதற்காகத்தான் ஓபிஎஸ் போராடிக் கொண்டிருக்கிறார்.ரவீந்திரநாத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்க அமித்ஷா முன்வந்த போது ஓபிஎஸ் மகன் என்பதால் தடுத்ததை கூட ஓபிஎஸ் பொறுத்துக் கொண்டார்.

 ஆனால் நான்கு பணக்காரர்கள் கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்கள். இதற்காகவா தொண்டர்கள் சிறை சென்றார்கள் குடும்பத்தை  இழந்தார்கள் என்பதினை  நினைத்துதான் அவர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்.  விரைவில் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக மெகா கூட்டணி உருவாகும் . அதற்கான காலம் கந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

வைத்திலிங்கம்,பேசியபோது,

“அதிமுகவும் சின்னமும் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் அனாதை ஆகி விடுவார். கட்சியில் தான் சேர காரணமாக இருந்த சேலம் கண்ணனுக்கும், தன்னை முதல்வராக்கிய சின்னம்மாவுக்கும், டிடிவி தினகரனுக்கும், ஆட்சி நிலைக்க துணை நின்ற ஓ.பி.எஸ்-க்கும் துரோகம் செய்து, துரோகத்தையே கொள்கையாக கொண்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு செய்த தியாகம் என்ன?, அவர் செய்தது நன்றி மறந்ததும், துரோகமும் மட்டுமே. கட்சியில் பொதுவாக காலில் விழுவார்கள் ஆனால் யாரும் தவழ்ந்து செல்ல மாட்டார்கள் ஆனால், தவழ்ந்து சென்று முதல்வரானார் பழனிசாமி.

அப்படி முதல்வர் ஆக்கிய சசிகலா மற்றும் அதற்கு துணைநின்ற டிடிவி தினகரனுக்கும், 4 ஆண்டு ஆட்சிக்கு துணை நின்ற ஓபிஎஸ்-க்கும் துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி.

அதிகாரத்தால் பணபலத்தால் எதையும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று அதிகார வெறி பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி.ஒற்றுமையாக கட்சியை கொண்டு செல்லலாம் என ஓபிஎஸ் சொல்கிறார் இதில் என்ன தவறு?  எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு இயக்கத்தை காப்போம், இயக்கமும் நமக்கு தான் இரட்டை இலையும் நமக்குதான்.

பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் கிடையாது, தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் 2026 வரை இருப்பார்” எனக் கூறினார்.

 

Leave a Reply